எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் அன்று வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள இடங்கள் விபரம் ..
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 108-வது ஆண்டு பிறந்த நாளான வரும் 17.01.2025, வெள்ளிக்கிழமைஅன்று டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்ஜிஆர் அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் கலந்து கொள்கிறார்
17.01.2025, வெள்ளிக்கிழமை அன்று
காலை 9.30மணி: சோமரசம்பேட்டை
காலை 10.00மணி: குழுமணி
காலை 10.15மணி: காவல்காரப்பாளையம்
காலை 10.45மணி: முசிறி கைக்காட்டி
காலை 11.15 மணி: துறையூர்
மதியம் 12.00மணி: மண்ணச்சநல்லூர்
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .