48 வருடத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் முதல் முறையாக சிறப்பாக கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் ஆன பொங்கல் கொண்டாட்டம் .
புதன்கிழமை (8/1/2025 )காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவை
மாண்புமிகு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் மற்றும் மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி
மீனாசந்திரா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கோலம் போட்டி, பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் விழாவை சிறப்பிக்கும் வகையில் மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெற்ற காளை வரவழைக்கப்பட்டது. நம் தமிழர் கலையான சிலம்பாட்டம் சுற்றி காண்பித்து மாணவ மாணவிகள் அசத்தினர் .
இதில் பெண் வழக்கறிஞரும் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை வியக்க வைத்தார்.
மாண்புமிகு நீதிபதி நடுவர் என் 6 சுபாஷினி பொங்கல் பானைக்கு சூடம் ஏற்றி வைத்தார். மாண்புமிகு நீதிபதி பிரபுசங்கர் பானை உடைத்தல் போட்டியில் கலந்துகொண்டு பானை உடைத்து பரிசை வென்றார் என்பது சிறப்பம்சமாகும் .
விழாவில் சக நீதிபதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
மேலும் அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உடன் சங்க நிர்வாகிகள் தலைவர் சுரேஷ், துணைத் தலைவர்கள் பிரபு,சசிகுமார் இணைச் செயலாளர் விஜய்நாகராஜன் பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினார்கள் .
விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் திறப்பாக செய்திருந்தார்.