திருச்சி மாவட்டத்தில்
8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, நடைமுறையிலுள்ள 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் ஆக மொத்தம் 8,34,099 குடும்பங்களுக்கு 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் தாங்களது குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் ஆகியவற்றினை பின் பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று வியாழக்கிழமை முதல் நாளை வெள்ளிக்கிழமை, சனி, மற்றும் திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் இந்த பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது .
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
அதன் தொடக்கமாக இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை இன்று வழங்கி தொடங்கி வைத்தனர் .
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, வருவாய் கோட்டாட்சியர் அருள், மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம்,திமுக பகுதி செயலாளர் மோகன்தாஸ்,
வட்டச் செயலாளர் மூவேந்திரன்,
முன்னாள் கவுன்சிலர் கவிதா,
குமுளித்தோப்பு மனோகரன், மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.