Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. காளைகள் மோதிக்கொண்டதில் நடந்த சோகம்.

0

'- Advertisement -

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும்.

வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகளை திமில் பிடித்து அடக்கும் காளையர்களை பார்ப்பதற்கே ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில், நாடுகளில் இருந்தும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருகின்றனர்.

வீரமிகுந்த ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டம் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும், அதிகப்படியான வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிகப்படியான காளைகளை வளர்க்கும் மாவட்டமாகவும் மாடுபிடி வீரர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

ஆண்டுதோறும், முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை  தொடங்கியது. பொதுவாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 -ஆம் தேதி வரை 120 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 30 -க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுப் போட்டிகள், 50 -க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, போட்டியில், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் பங்கேற்க உள்ளனர்.

Suresh

இந்நிலையில், நடப்பாண்டின் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினார்கள்.

ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

முதலாவதாக தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய பங்குத்தந்தை சிறப்பு பிரார்த்தனை செய்ய, கோவில் காளை மேல தாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு வாடிவாசலிலிருந்து முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு காளையாக களம் கண்டது. இதில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையர்களுக்கும் இருசக்கர வாகனம், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசும், ஜல்லிக்கட்டு போட்டி நிர்வாகமும் சிறப்பாக செய்து இருந்தனர்.
பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில், காளையினால் காயம் ஏதும் ஏற்பட நேர்ந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினரும், மீட்பு படையினரும்,108 வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்து வைக்கப்பட்டிருந்தது .

இந்த நிலையில் வாடிவாசல் திறந்து வெளிவந்த காளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் சிசு என்பவருக்கு சொந்தமான ஒரு காளை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியது. அதனை விழா கமிட்டியினர், மாடுபிடி வீரர்கள் , காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் காளையை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.