திருச்சியில் மின்சார வாரியம் சார்பில் நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் ஜன. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நக், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள் உறையூா் அரசு குடியிருப்பு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருந்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா், திருவானைக்கா, அம்மா மண்டபம் சாலை, நெல்சன் சாலை ஆகிய பகுதிகளில் ஜன. 6 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .