Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியாமல் கட்சிக்காரர்கள் 2 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது . லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்.இது திருச்சி திமுக உட்கட்சி விவகாரம் .

0

'- Advertisement -

திருச்சி திமுகவில், எப்போதும் உட்கட்சி பூசல் இல்லாத நாளில்லை போலும். அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் இடையே தான் மோதல் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ-வான சவுந்தரபாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக முகநூலில் ஆக்ரோஷமாக வெடித்தார்.

அப்படி சூடாக பேசியவர், சில நாட்களாக எதுவும் பேசாமல் இருந்து வந்தார் . இதன் பின்னணியில், நேருவின் மகனும் பெரம்பலூர் எம்பி-யுமான அருணின் சமாதான சாமர்த்தியம் இருப்பதாக கூறப்பட்டது . திமுக வட்டாரத்தில். லால்குடி தொகுதியை தொடர்ந்து 4-வது முறையாக தன்வச​மாக்கி வைத்திருப்பவர் சவுந்​தர​பாண்​டியன்.

அப்படிப்பட்ட தனக்கு கட்சியில் எவ்வித முக்கிய​வத்து​வமும் தருவதில்லை, தனது தொகுதியில் நடக்கும் அரசு விழாக்​களுக்குக் கூட அமைச்சர் நேருவுக்கு பயந்து​ கொண்டு அதிகாரிகள் தன்னை அழைப்​ப​தில்லை என முகநூல் வழியாக புலம்பி வந்தார் சவுந்​தர​பாண்டியன் இதுகுறித்து திமுக தலைமை​யிடமும் புகார் தெரிவித்​தார். இதையடுத்து இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசி சமாதானப்​படுத்தி அனுப்​பியது தலைமை. இதன் பிறகு தனது முகநூல் பதிவுகளை மறைத்த சவுந்​தர​பாண்​டியன், நேருவுக்கு எதிராக பேசுவதையும் தவிர்த்து வந்தார்.

இதன் பின் லால்குடி தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்​சிகள் சவுந்​தர​பாண்​டியன் தலைமை​யிலேயே நடந்தன. கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு நடைபெற்ற திமுக செயல்​வீரர்கள் கூட்டத்தில் மேடையில் அமராமல் கீழேயே அமர்ந்​திருந்தார் சவுந்​தர​பாண்​டியன். அவரை மேடைக்கு வரும்படி நேருவின் மகன் அருண் நேரு எம்.பி கையைப்​பிடித்து அழைத்​தார். முதலில் வர மறுத்​தவர், அதன்பிறகு மேடையில் அமர்ந்​திருந்​தார். அதுமுதலே சவுந்​தர​பாண்​டியன் அமைதி​காக்​கிறார். அதற்குக் காரணம், அருண் நேரு என்று சொல்லப்​பட்டது.

இதுகுறித்து பேசிய சவுந்​தர​பாண்​டியனின் ஆதரவாளர்கள், ‘ஒரு காலத்தில் தனது சொந்தத் தொகுதியாக இருந்த லால்குடியில் தனக்கு விசுவாசமான ஒருவரை எம்எல்ஏ பதவியில் அமர்த்த வேண்டும் என நினைத்​துத்தான் சவுந்​தர​பாண்​டியனைக் கொண்டு வந்தார் நேரு. அவரும் நேருவுக்கு விசுவாச​மாகத்தான் இருந்​தார். ஆனால், அதற்கான ‘பலன்’ எதையும் அவர் அடையவில்லை. நேரு தரப்பினர் திமுக எம்எல்​ஏ-க்​களுக்கு எதையுமே கிடைக்க​விடு​வ​தில்லை.

அவர்களுக்குப் போகத்தான் மற்றவர்​களுக்கு. லால்குடியில் சவுந்​தர​பாண்​டியன் 4 முறை ஜெயித்​திருந்தும் பொருளாதார ரீதியாக அவருக்கு எந்த வளர்ச்​சியும் இல்லை. இதைக் கேட்டதால் தான் அவருக்கும் நேருவுக்கும் முட்டிக் கொண்டது. இதையடுத்தே, லால்குடி தொகுதியில் சவுந்​தர​பாண்​டியன் இல்லாமலேயே அமைச்சர் நேரு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் தலைமை தலையிட்​டதால் தான் நேரு தரப்பு இப்போது சைலன்டாக இருக்​கிறது’ என்றனர்.

அப்போது சவுந்​தர​பாண்​டியனிடம் இதுகுறித்து கூறியிருந்தது , ‘நான் அமைதியாக இருக்​கிறேன் என்பதால் அவர்கள் (நேரு, அருண் நேரு) மாறிவிட்டதாக அர்த்தம் இல்லை. எந்தக்​காலத்​திலும் அவர்களிடம் மாற்றத்தை எதிர்​பார்க்க முடியாது. அவர்கள் அனுமதி இல்லாமல்

கட்சிக்​காரர்கள் 2 ரூபாய் கூட
சம்பா​திக்க முடியாது. ( ஏற்கனவே ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இங்கு அவர்கள் மட்டுமே பணக்காரராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் எனக் கூறியிருந்தார்) அதற்காக தினமும் குறைகூறிக் கொண்டிருக்க நாங்கள் இருவரும் திமுக – அதிமுக இல்லை. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். கட்சித் தலைமை​யிடம் சொல்ல வேண்டியதை சொல்லி​விட்டு மக்கள் பணிகளை தொடர்​கிறேன்’ என்றார்.

Suresh

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, அடுத்த தேர்தலிலும் சவுந்​தர​பாண்​டியன் வெற்றி​பெற்று திமுக ஆட்சி​யமைந்தால் சீனியாரிட்டி அடிப்​படையில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்​பிருக்​கிறது. 2 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கட்சி முடிவெடுத்தால் சவுந்​தர​பாண்​டியனுக்கும் மா.செ வாய்ப்பு தேடி வரலாம். இதையெல்லாம் மனதில் வைத்தே அவர் நேரு தரப்பிடம் பகைமை பாராட்​டாமல் இருக்​கிறார்’ என கூறப்பட்ட நிலையில் வெளிப்​பார்​வைக்கு சமாதான​மாகி​விட்டது போல் தெரிந்​தாலும் உண்மை​யில், நேருவுக்கும் – சவுந்​தர​பாண்​டியனுக்கும் இடையிலான அதிகார யுத்தம் நீறுபூத்த நெருப்​பாகவே இருந்த நிலையில் தற்போது நேற்று மீண்டும் இது வெடித்துள்ளது .

இப்போது பார்த்தால் மீண்டும் திருச்சி லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியனுக்கு, கே.என்.நேருவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருவது, செளந்தரபாண்டியனின் பேஸ்புக் பதிவு மூலம் வெளிச்சத்து வந்துள்ளது.

நேற்று செளந்தரபாண்டியன் வெளியிட்ட இரு பேஸ்புக் பதிவுகள், அதை உறுதி செய்கின்றன.

திருச்சி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று யாரும் என்னுடன் பேசக்கூடாது, தொடர்பு கொள்ள கூடாது என்று அதிகாரம் செலுத்தி வந்தவர், இப்போது வெளி மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தில், ‘சௌந்தரபாண்டியன் கிட்ட பேசுறியா..’ என்றும், இன்னும் ஒரு படி மேலே சென்று அமைச்சர்கள் இடத்தில் கூட. ‘உங்களை சௌந்தரபாண்டியன் வந்து பார்த்தானா’ என்று விசாரிக்கின்றாராம், முதன்மையானவர், மூத்தவர்! கட்சிக்காரர்கள் இடத்தில் அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ‘சௌந்தரபாண்டியனுக்கு பத்திரிக்கை வச்சியா?’ அப்படின்னு விசாரிக்கிறது இதுதான் இப்ப இவருக்கு முக்கியமான வேலைகள்.

நாங்கள் என்ன வேலுமணி, தங்கமணி என்றும் கட்சியையும் முதல்வரையும் விமர்சனம் செய்பவர்கள் உடனுமா தொடர்பில் உள்ளோம். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இப்போது நடந்த தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கூட மாண்புமிகு தலைவர் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியும், எங்கள் மீது வன்மத்தை தினம் தினம் திணிப்பதே இவரின் முக்கியமான பணியாக உள்ளது,’ என்று அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் குறிப்பிடாமல், மறைமுகமாக அவரை சாடி பதிவை வெளியிட்டார்.

இந்த பதிவு, பேஸ்புக் பக்கத்தில் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அவருடன் பலர் தொடர்பு கொண்ட நிலையில், அதன் பின் என்ன ஆனது என்று தெரியவில்லை, அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார் செளந்தரபாண்டியன். அது இன்னும் உக்கிரமாக இருந்தது.

அடுத்த பதிவில் :

நான் ஒரு சுயமரியாதை காரன், நான் யாரையும் நீ ஏன் போய் அவரை பார்த்தாய், நீ ஏன் போய் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாய், என்று இன்று வரை யாரையும் எப்பொழுதும் கேட்டதில்லை. புத்தாண்டு அன்று வாழ்த்து சொல்ல மூத்தவரை சந்தித்தவர் இடத்தில் மூத்தவர், ‘இந்த படத்தை எடுத்து, சௌந்தரபாண்டியனுக்கு அனுப்பு,’ அப்படி என்று சொல்கின்றார் என்றால், இதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்,’ என்று அந்த பதிவில் செளந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்

வெளிப்படையாக திருச்சி திமுகவின் உட்கட்சி பூசல், வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அதுவும் திமுகவின் முக்கிய அமைச்சர் மீதான இந்த குற்றச்சாட்டை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே வெளியிட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.