Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு.அரசு ஊதியம் பெறும் இவருக்கு இத்தனை கோடி சொத்துக்களா? பத்திரிகையாளர்களை மதிக்காத இவரின் சொத்துக்கள் விவரம் சில …

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலராகவும், 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்ட உணவுப்வபாதுகாப்புத்துறை நியமன அலுவலராகவும் பணியாற்றினார். பின்பு அப்போதிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சிபாரிசில் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் 2021 வரையுள்ள காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி 2018 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக ரமேஷ் பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தமாக ரூ.18 லட்சத்து 64 ஆயிரத்து, 428 ரூபாயாக இருந்துள்ளது.

Suresh

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2018 முதல் 2021ம் ஆண்டிற்கிடைப்பட்ட காலத்தில் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 2 கோடியே,36 லட்சத்து, 60 ஆயிரத்து,294 ரூபாயாக இருந்துள்ளது.(ரமேஷ்பாபுவிற்கு தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நகரில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இருப்பதாகவும், திருச்சி தேவதானம் கிரிரோடு பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தஞ்சை முனிசிபல் 4-வது வார்டில் 5000 சதுரடி காலி மனையும், 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரியும், டாடா ஏஸ், மாருதி ஈகோ வாகனமும் சொந்த உபயோகத்திற்கு போலோ கார் 1, சபாரி x கார் 1, டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் 1, ரூ. 37 லட்சம் மதிப்புள்ள MG Cluster Car என கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பை குடும்ப டிரஸ்ட் Charu Radha Naveen Trust க்கு மடைமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர நீலகிரியில் தேயிலை தோட்டங்கள் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. திருச்சி மாவட்ட முதன்மை அமைச்சரின் ஆதரவு இருப்பதால் இவரை எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.)

இதில் அவர் பெற்ற மாத வருமானம், அவருடைய மனைவி பெயரில் வாங்கிய கடன்கள் உள்ளிட்டவற்றை தவிர அவரின் சொத்து மதிப்பு 92.69 சதவீதம் உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி சர்மிளா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

ரமேஷ் பாபு மீது ஏற்கனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை , குக்கா விற்பனையாளர்களிடம் இருந்து மாதம் ஓர் பெரிய தொகை வருவதாகவும் , பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்தும் ( உணவு பரிசோதனை செய்ய சொல்ல மாட்டார் ) மாமுல் வருகிறது .
பத்திரிகையாளர்களை சிறிதும் மதிக்க மாட்டார் . உங்கள் மீது இப்படி புகார் வந்துள்ளதாக கூறினால் நான் எனது பணியை செவ்வனை செய்கிறேன் நீங்கள் உங்கள் பணியை பாருங்கள் என கூறியவர் . ஜங்ஷன் அருகே உள்ள ஒரு முன்னணி பிரியாணி ஹோட்டலில் பிரபல தினசரி பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சாப்பிடும் போது சாப்பாடு சரியில்லை என ரமேஷ் பாபுவுக்கு நேரடியாக போன் செய்தார், அவர் தற்போது பணியில் அதிகாரியில் இல்லை நீங்களே ஒரு வீடியோவாக அதை பதிவு செய்து அனுப்புங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார் .
இவரும் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்த போது கடையில் இருந்த பணியாளர் ஒருவர் ( ரமேஷ் பாபு அந்த பிரியாணி ஹோட்டல் உரிமையாளருக்கு போன் செய்து கூறிய பின் ) புகைப்படக் கலைஞரின் செல்போனை பறித்து சென்று விட்டார். இதிலிருந்து இவர் திருச்சியில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும், மரசெக்கு எண்ணெய் தயாரிக்கும் இடங்கள் போலி டீத்தூள் தயாரிக்கும் இடங்கள், போலி ஆயில் கம்பெனிகளில் சோதனை செய்து சீல் வைத்து அது உடனடியாக திறக்கப்பட்டது மூலம் இவர் எப்படி இவ்வளவு பணத்தை சம்பாதித்தது என தெரிய வருகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.