திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி, நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்தும் நாளை ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அ இ அ தி மு க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க
அதிமுக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் பி.தங்கமணி அவர்கள் அறிவுறுத்தலின்படி
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல்.
அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும் இருந்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்
நிர்வாகத் திறனற்ற மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும் கண்டித்தும்..
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்..
அதிமுக அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, சட்டமன்ற உறுப்பினருமான
ஆர்.பி.உதயகுமார் தலைமையில்
நாளை 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில்..
மரக்கடை எம்.ஜி.ஆர் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதுசமயம்
மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,
வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .