Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற இரண்டு வாலிபர்கள் கைது

0

'- Advertisement -

திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது நிச்சயப்பட்டுள்ளனர் .

திருச்சி அரியமங்கலம், கணபதி நகர் அருகே நேற்று அரிமங்கலம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு போதை மாத்திரை சந்தேகத்துக்கு இடமாக நின்ற அரியலூர் மாவட்டம் கூத்தூர், வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது37) மற்றும் அரியமங்கலம், காமராஜ் நகர், சௌகத்அலி தெருவைச் சேர்ந்த சானவாஸ் ஹூசைன் (வயது23) ஆகிய 2 பேரை போதை மாத்திரை விற்பனை செய்ததற்காக அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 75 போதை மாத்திரைகள், 2 மருத்துவ ஊசிகள் மற்றும் மருந்து கலந்த தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.