Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

 

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கடந்த ஆட்சிகாலத்தில் வழங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ. 5000 வழங்க வேண்டும்.

வீடு கேட்டு விண்ணப்பித்து உள்ள அனைத்து கட்டுமான தொழிலாளிகளுக்கும் நிபந்தனைகளை தளர்த்தி வீடு உடனே வழங்க வேண்டும்.

பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும்.

நேரடிப்பதிவை துவங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளி மற்றும் ஓய்வூதியம் பெரும் தொழிலாளி மரணம் அடைந்தால் உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

ஆன்லைன் சர்வரை சரிப்படுத்த வேண்டும்.

நல வாரிய கூட்ட முடிவுகளை அமலாக்க அரசாணை வெளியிட வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டத்தை மாதாமாதம் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் தொழிலாளிகளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சிமெண்ட், மணல், செங்கல், ஜல்லி, கம்பி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று வெள்ளிகிழமை மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி,
சிஐடியூ புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன்,
கட்டுமான சங்க புறநகர் மாவட்ட தலைவர் தியாகராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் பூமாலை
ஆகியோர் பேசினர்.

இதில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.