திருவரங்கத்தில் நடந்த பரிதாப நிகழ்வு.
தீயில் கருகி மூதாட்டி சாவு.
பூஜைக்கு விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்.
திருவரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மனைவி லட்சுமி (வயது 85)சம்பவத்தன்று வீட்டில் லெட்சுமி பூஜை அறையில் இருந்த விளக்கை ஏற்ற முயன்றார். அப்பொழுது எதிர் பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது இந்த தீ சிறிது நேரத்தில் அவரது இடுப்பு மற்றும் இரு கால்களிலும் பரவி காயமடைந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் .
இந்நிலையில் நேற்று முன் தினம் லெட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் . இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.