அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.
இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் சிந்தாமணி அய்யாளம்மன் கோயில் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.
மாலை 4 மணி அளவில் சிம்பு, விக்னேஷ், ஜாகிர் உசேன் ஆகிய மூன்று மாணவர்கள் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இத்தகவல் கிடைத்தும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரை மூழ்கிய மூன்று மாணவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.
போலீசார் மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
ஆற்றில் காணாமல் போன மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தங்களது குழந்தைகளை காணாமல் கதறி அழுதது கார்போரின் கல்நெஞ்சியும் கரைய வைத்தது .