Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காவேரி மருத்துவமனை செய்தி தொடர்பாளர் சிவகுமார் சாலை விபத்தில் உயிரிழந்தார் .

0

 

திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த விபத்தில் காவேரி மருத்துவமனை நிறுவன மக்கள் தொடா்பு அலுவலா் உயிரிழந்தாா்.

திருச்சி வயலூா் சாலை கீதா நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் சிவகுமாா் (வயது 55), திருச்சி காவேரி மருத்துவக் குழும மக்கள் தொடா்பு அலுவலராக பணியாற்றி வந்தார் .

நேற்று சனிக்கிழமை இவா் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் வயலூா் சாலை தனியாா் இனிப்பகம் அருகே வந்தபோது, மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியது.

இதில் படுகாயமடைந்த சிவகுமாா் திருச்சி அவர் பணியாற்றிய காவேரி மருத்துவமனையிலேயே சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரிக்கின்றனா்.

மறைந்த சிவக்குமார் பத்திரிகையாளர்கள் அனைவரையும் தனது சகோதரர்கள் போன்ற கருதி பல உதவிகளை செய்து வந்தவர்.

பத்திரிகையாளர்களுக்கு பல வகையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தவர்.

அவரது இறப்பு குடும்பத்தார், காவேரி மருத்துவமனைக்கு மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பெரும் இழப்பு

Leave A Reply

Your email address will not be published.