ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன்.
ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், போலீசில் அளித்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரிய போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பெண் வழக்கறிஞரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நரசிம்மன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால், நாளை அவர் ஜாமீனில் விடுபட்டாலும், வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது