திருச்சி ஜேகே நகரில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம். பொதுமக்கள் மறியல்.எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் பேச்சுவார்த்தை .
திருச்சி கிழக்குத் தொகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்.
திருச்சி ஜேகே நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருச்சியில் மழை பெய்தது. இந்நிலையில்
திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது.
குறிப்பாக ஜேகே நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது மேலும் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி வடியாமல் இருந்தது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஜேகே நகர் பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று காஜாமலை மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து வயர்லெஸ் ரோடு மற்றும் புதுக்கோட்டை ரோடு சாலை பகுதியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர் .
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் ஜேகே நகர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது .