லால்குடி பகுதியில்
நாளை மின் நிறுத்தம்.
திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், நாளை டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான,வாளாடி, நகர், கீழ மற்றும் மேல பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, டி வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், சிறுமருதூர், மேலவாளாடி, எசனைக்கோரை, கீழ்மாரிமங்கலம், அகலங்க நல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர் வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை (சரவணா நகர், தேவி நகர், கைலாஷ் நகர்) உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை லால்குடி செயற்பொறியாளர் கே. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.