திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இனாம்குளத்தூர் ஐஓசிஎல் எல்பிஜி சிலிண்டர் வாகன ஓட்டுனர்களுக்கு மாத சம்பளம் 48 ஆயிரம் ரூபாய் அல்லது மத்திய மாநில அரசு நடைமுறையில் என்ன அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சம்பளமாக வழங்க வேண்டும்,
தற்போது நடைமுறையில் இருக்கும் வாகனத்தில் வாடகையில் 12.5% என்ற முறையில் வழங்க வேண்டும்.
5 கிலோ 10 கிலோ சிலிண்டர்கள் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ ஓட்டுனர்களை பயன்படுத்தக் கூடாது.
இந்தப் பணியில் ஓட்டுநர்களை பயன்படுத்துவதால் வாகனம் இயக்கும் பொழுது சோர்வு ஏற்பட்டு வாகனத்தை இயக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
மாலை வளாகத்தில் சிலிண்டர் வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் வசதி இல்லாததால் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு அவ்வப்போது ஏற்பட்டு விபத்தும் ஏற்படுகிறது.
ஆலையின் பார்க்கிங்கில் ஓட்டுநர்களுக்கு சுகாதாரத்தின் கூடிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் ஓய்வு அறை வசதியும் செய்து தர வேண்டும்.
ஆலையின் ஒப்பந்தத்தில் இயக்கப்படும் அனைத்து சிலிண்டர் வாகனங்களுக்கும் ஒரு உதவியாளர் வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்து ரூபாய் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் அமைப்பு மாநில பொதுச் செயலாளர் விஸ்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்க மாநில செயற்குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை உரையாற்றினார், மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் இளையராஜா முத்துக்குமார் முருகேசன் ரவி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர் மாவட்ட தலைவர் வேலுமணி, மாவட்ட இணைச் செயலாளர் மகேஸ்வரன் நன்றி உரை கூறினர்.