Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அனைத்து குறைகளையும் தீர்க்க மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமே தீர்வு.காட்டூரில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய பின் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

0

 

இன்று நடந்தது :

திருச்சி காட்டூர் பகுதியில்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மனுக்களை பெற்றார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி37,37 ஏ, 38,38 ஏ,,39 ஏ,39,40 எ,,40 வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மனுக்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனுக்களை பெற்றார்.

இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகள்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்:-

 

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த காட்டூர், திருவெறும்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் ரூபாய் 7,486.78 மதிப்பீட்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், தாமரைக் குளம் சீரமைத்தல், வாய்க்கால் தடுப்பு சுவர் அமைத்தல் உ,ட்பட பல்வேறு பணிகளை இந்த மூன்று ஆண்டுகளில் பணிகளை முடித்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் எனினும் பொது மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியுமா என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான் என்றும் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகிய உங்களை நேரில் சந்தித்து அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டம் தான் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்றும்
தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதாகவும் இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் அருகே அரசு அதிகாரியிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு கேட்கப்பட்டு வெகு விரைவில் முடிக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார் மாநகராட்சி துணைப் பொறியாளர் ஜெகஜீவன் ராம் மாநகராட்சி இணை ஆணையர் சரவணன் வட்டாட்சிய ஜெயபிரகாஷம் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை நிர்வாக இயக்குனர் காளிதாஸ் மாமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கே. கார்த்தி, தாஜுதீன், ரெக்ஸ், வட்ட செயலாளர்கள் தமிழ்மணி, மன்சூர் ,வினோத் கனகராஜ், செல்வராஜ், அருண், குணாநிதி,
மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.