இன்று (14 12 2024) சனிக்கிழமை சாக்சீடு நிறுவனத்தில் குழந்தைகளுக்கான பகிர்வு விழா நடைபெற்றது.
இவ்விழா அருட் சகோதரி பரிமளா தலைமையில் நடைபெற்றது. சாக்ஸீடு குழந்தைகள் தத்துவள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி தலைமை உரை ஏற்றார். மோகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
வடுகர் பேட்டை புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாடகம் மற்றும் நடனங்களை அரங்கேற்றினர்.
பொன்மலைப்பட்டி புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் கிறிஸ்து பிறப்பு நடனங்கள் பாடல்களையும் பாடினர். ஆர் சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் நடனம் அரங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை சாக்சீடு இயக்குனர் பரிமளா அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சி தொகுப்பினை
சசி வழங்கினார். சுகப்பிரியா குழந்தைகள் தத்துவள மைய சமூக பணியாளர் நன்றியுரை ஆற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உபசரிப்பும் நடைபெற்றது.