Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தொடர் மழையால் பொதுமக்கள் அவதி. வீடுகளில் புகுந்த மழை நீர் .

0

 

திருச்சி:தொடர் மழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்,பொதுமக்கள், வியாபாரிகள் அவதி.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றமுத்த தாழ்வு நிலை காரணமாக திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பங்குனி ஆறு மற்றும் நந்தி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லால்குடி மற்றும் புள்ளம்பாடி பகுதி சுற்றியுள்ள தாழ்வான இடங்களில் உள்ள நெற்பயிர்கள் நீரில் முழ்கின.

நெற்பயிர்கள் சேதம் அடைந்தன:
மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது . இதே போன்று முசிறி, துறையூர், மணப்பாறை, தொட்டியம் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மாவடி குளம் உடைந்தது:

திருச்சி பொன்மலை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள மாவடி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேறி பொன்மலை பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தகலறிந்து அதிகாரிகள் விரைந்து சென்று மாவடிகுளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

வீடுகளில் புகுந்த மழை நீர்:

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயலலிதா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில்நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்ததது.இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
பல வீடுகளில் உள்ளே மழை நீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த கட்டில் மேஜை,நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.இரவு முழுவதும் மழைநீர் புகுந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருந்தனர்.
இதே போன்று
திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கிராப்பட்டியில் உள்ள அன்பு நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். இரவுமுழுவதும் தூங்காமல் கண்விழித்து இருந்தனர்.
மேலும் ஏர்போர்ட் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர், ரன்வே நகர் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் .

மேலப்புதூர் சுரங்கத்தில் மழைநீர்:

திருச்சி மாநகரில் தொடர்ந்து நேற்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது குறிப்பாக இரவு முழுவதும் பலத்த மழை பெய்த காரணத்தால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றனர்.திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இது அடுத்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக செல்லும்அனைத்து பேருந்துகளும் முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது.இதனால் முதலியார் சத்திரம் ரோடு பரபரப்பாக காணப்பட்டது. இதே போன்று திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு அண்டகொண்டன் பகுதியில் உள்ள பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் தென்னூர் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் காஜாப்பேட்டை மெயின்ரோடு, புத்தூர் பகுதி, சத்திரம் பேருந்து நிலையப் பகுதி, கரூர் பைபாஸ் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது வரை மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது .

மழை அளவு.

திருச்சி மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 94.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. திருச்சி மாநகரில் ஜங்ஷன் பகுதியில் 65.4 மில்லி மீட்டர் மழைபெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 52.26 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.