திருச்சியில் கொடுத்த பணம் ரூ.3.50 லட்சத்தை திருப்பி கேட்ட தொழிலதிபர் மற்றும் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி புத்தூர் பாரதி நகரில்
வீடு புகுந்து தொழிலதிபர்,குடும்பத்தினர் மீது தாக்குதல்
கார் கண்ணாடி உடைப்பு.
திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (வயது 36 )இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபரான இவரது நிறுவனத்தில் திரவிய மலை ஜனனி என்பவர் பயிற்சிக்காக சேர்ந்தார் .அப்போது அவர் பயிற்சி கட்டணம் செலுத்தவில்லை. பயிற்சியின்போது மேலும் 3 .50லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
பின்னர் பயிற்சி முடிந்தவுடன் வேறு நிறுவனத்திற்கு திரவிய ஜனனி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பயிற்சி கட்டணத்தை செலுத்தாமல் தன்னிடம் கடன் வாங்கிச் சென்ற திரவியமலை ஜனனியிடம் தினேஷ் பாபு கொடுத்த மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த திரவிய மலை ஜனனி, தினேஷ் ராஜ், தீபன் கார்த்திக்ராஜ், கிருஷ்ணகுமாரி ஆகிய நான்கு பேர் தினேஷ் பாபுவின் வீட்டிற்கு வந்து ,வீடு புகுந்து தினேஷ் பாபு மற்றும் அவரது மனைவி, சகோதரர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கத்தியாலும் தாக்கியுள்ளனர் .கார் கண்ணாடியையும் உடைத்து செல்போனையும் சேதப்படுத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட தினேஷ் பாபு திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார் .
புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.