திருச்சி தில்லை நகரில்
டிபன் கடை ஊழியரின் பைக்கை திருடிய
பலே திருடன் அதிரடியாக கைது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் ( வயது 48 ) இவர் திருச்சி தில்லை நகர் 4 -வது கிராஸ் பகுதியில் உள்ள டிபன் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் .
இவர் தான் பணிபுரியும் ஹோட்டல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தில்லை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியதாக கீழ ஆண்டாள் வீதியைச் சேர்ந்த யுகேந்திரன் (வயது 20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட யுகேந்திரன் மீது கோட்டை, திருவரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.