திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை
செல்போன் டவரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பனகல் தெரு பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் 2001ல் அமைக்கப்பட்டது.
பின்னர் அந்த நிறுவன அதிகாரிகள் மேற்கண்ட செல்போன் டவரை பார்வையிட்டபோது அதிலிருந்த ரூபாய் 20 லட்சத்து 28,72 மதிப்பிலான மின்சாதன பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் அலுவலர் சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் ஹை ரோடு பகுதியைச் சேர்ந்த தாஜ்மல்ஹான்
(வயது 40) என்பவர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 5 -வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் டவரில் இருந்த மின்சாதன பொருட்கள் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.