Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருந்து சென்னை சென்று ஆண் நண்பருடன் அளவுக்கு அதிகமாக பீர், சிகரெட் குடித்து உல்லாசமாக இருந்த இளம் பியூட்டிசன் மயங்கி விழுந்து சாவு.

0

'- Advertisement -

தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த போது, பீர் குடித்து, சிகரெட் புகைத்த திருச்சி இளம் பெண் அழகு கலை நிபுணர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை சேர்ந்த லதா (வயது 26), (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

சென்னையில் பியூட்டிஷியனாக (அழகுகலை நிபுணர்) பயிற்சி பெற்றார். பிறகு வெளிநாட்டிற்கு சென்று அங்கு சிறிது காலம் அழகு கலை நிபுணராக பணியாற்றினார்.பிறகு சொந்த ஊர் திருச்சிக்கு வந்து விட்டார். திருச்சியிலேயே அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்தார்.

ஒவ்வொரு மாதமும் தனது பணிக்கு தேவையான பொருட்கள் வாங்க லதா சென்னைக்கு சென்று வருது வழக்கம்.

கடந்த 5ம் தேதி திருச்சியில் கிளம்பி சென்னைக்கு சென்று உள்ளார்.

Suresh

பிறகு சூளைமேடு சண்முகம் சாலையில் உள்ள கில் நகர் 2வது தெருவில் அறை எடுத்து வசித்து வரும் தனது ஆண் நண்பர் முகமது நபிக் (வயது 31) என்பவருடன் 2 நாள் தங்கி இருந்தார். சூளைமேட்டில் உள்ள தனது ஆண் நண்பரின் அறைக்கு சென்ற லதா அவருடன் 2 நாட்களும் உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது ஆண் நண்பருடன் அளவுக்கு அதிகமாக பீர் குடித்தும், அதிகளவில் சிகரெட் பிடித்தபடி இருந்து வந்துள்ளார்.

லதாவுக்கு சிறு வயதில் இருந்து நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி மாத்திரைகள் எடுத்து வருகிறார். ஆனால் சம்பவத்தன்று லதா சாப்பிட்ட பிறகு உட்கொள்ள வேண்டிய மாத்திரையை, அவர் போதை மற்றும் பசி இல்லாத போது சாப்பிடுவதற்கு முன்பாக மாத்திரை உட்கொண்டதாக கூறப்படுகிறது. ஆண் நண்பருடன் 7ம் தேதி காலை 11 மணி வரை உல்லாசமாக இருந்துவிட்டு, லதா கோயம்பேட்டில் பணியாற்றும் தனது தோழி ஆர்த்தியை ஆட்டோவில் அழைத்து கொண்டு பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மதுரா அழகர் லாட்ஜுக்கு சென்று
பின் லாட்ஜுக்கு வந்த சிறிது நேரத்தில் லதாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது தோழி ஆர்த்தி, உடனே கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு டாக்டர்கள் லதாவை ஆய்வு செய்த போது, அவரது இதய துடிப்பு குறைவாக இருப்பதாகவும், உடனே மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரைத்தனர்.

அதன்படி, அவரது தோழி ஆர்த்தி, லதாவை அவசர அவசரமாக கார் மூலம் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு லதாவை ஆய்வு செய்த டாக்டர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே லதா இறந்துவிட்டதாக கூறினர்.

பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின்படி, பாண்டிபஜார் போலீசார் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், லதா இறப்பு குறித்து திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும், லதாவுடன் இருந்த தோழி ஆர்த்தி மற்றும் லதாவின் ஆண் நண்பரான முகமது நபிக் ஆகியோரை அழைத்து சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே லதாவின் இறப்பு மர்மமாக இருப்பதால், போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், லதா இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் இருந்து சென்னை சென்ற இளம் அழகு கலை நிபுணர் ஆண் நண்பருடன் 2 நாட்கள் மது போதையில் அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்து உல்லாசமாக இருந்த போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.