திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை திருடிய 3 சிறுவர்கள் கைது
திருச்சி மேலப் புலி வார்டு ரோட்டில் அமைந்துள்ள புத்தகக் கடையை உடைத்து பணத்தை கொள்ளையடித்த
3 சிறுவர்கள் கைது – பணம் பறிமுதல்.
திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளது. இதில் முத்து மாணிக்கம் என்பவரது மகன் தியாகராஜன் (வயது 32) என்பவர் ஸ்டேஷனரி மற்றும் புத்தகக் கடை வைத்துள்ளார் .இவர் கடையை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது.
உடனே இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மூன்று சிறுவர்கள் கடையை உடைத்து திருடியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 10,000 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.