Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வேலையில்லா பட்டதாரி தற்கொலை. மனைவி மகள் தவிப்பு.

0

'- Advertisement -

 

திருச்சி அம்மா மண்டபத்தில் வேலையில்லாத விரக்தியில் பட்டதாரி கணவன் தற்கொலை.

குழந்தையுடன் மனைவி வெளியில் சென்ற போது நடந்த சோக சம்பவம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் குருகிருஷ்ணன். (வயது 39) பட்டதாரி வாலிபர் .

இவரது மனைவி கீர்த்தனா (வயது 38) திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
குரு கிருஷ்ணனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார் .

இந்நிலையில் அவரது மனைவி தனது குழந்தையுடன் வெளியில் சென்று இருந்தார் .

மனைவி இல்லாத நேரத்தில் வீட்டில் குரு கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய மனைவி தூக்கில் தொங்கிய கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மனைவி கீர்த்தனா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
இப்புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை இழந்து மனைவியும், தந்தை இழந்த மகளும் தவித்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.