திருச்சியில் முதன்முறையாக வலியின்றி குறைந்த செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியது சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை .
மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் இன்று திருச்சிராப்பள்ளியில் அறிமுகப்படுத்தியது.
இது குறித்து திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது :-
மிக நுட்பமாகவும், மிக துல்லியமாகவும் மற்றும் காயங்கள் அற்ற, தழும்பில்லா அறுவை சிகிச்சை மற்றும் வலி குறைந்த மருத்துவ சிகிச்சை முறையை முதன் முதலில் குறைந்த செலவில் ரோபோடிக் சிகிச்சையின் மூலம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்குவதற்கு தயாராக உள்ளது சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
சவால்கள் நிறைந்த புற்றுநோயை சிகிச்சையின் மூலம் அகற்றி பல சாதனைகள் செய்து கொண்டிருக்கும் நம் சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மற்றும் ஒரு புதிய பரிமாணத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் பித்தப்பை, குடல் இரக்கம், கருப்பை மற்றும் புற்றுநோய்களை எளிய முறையில் அகற்ற வழங்கப்படும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் தொகையும், லாபரஸ்கோபிக் சிகிச்சையின் செலவு தொகையும் ஒன்றே.
எங்கள் சில்வர் லைன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை தொடங்கி வைத்த லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை முறையில் உச்சம் தொட்ட மருத்துவ உலகின் புகழ் பெற்றுவிளங்கும், ஜெம் மருத்துவமனை (சென்னை மற்றும் கோயம்புத்தூர்) அதன் தலைவர் பழனிவேல் அவர்களை வரவேற்று மகிழ்ச்சிக்கொள்கிறது சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
லாபரஸ்கோபிக் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் குறைவான கட்டணத்தில் உயர்தரமான புற்றுநோய் சிகிச்சையை வழங்கித் தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனைகாண விருதினை நமது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் பெற்று தமிழகத்தின் முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.
இந்த விழாவினை பெருமையோடு ஏற்று நடத்தும் மருத்துவர், (நான்)ஜி. செந்தில்குமார் சில்வர் லைன் ரோபோடிக் அறுவை சிகிச்சை துறைக்கு தலைமை ஏற்று நடத்துகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோன்.
மருத்துவ உலகில் ரோபோடிக் அறுவை சிகிச்சை அடுத்த மைல் கல்லாக அமைய போகும் இந்த நிகழ்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும பத்திரிக்கைத்துறை நண்பர்கள் அனைவரும் எனது நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என பேட்டியின் போது தெரிவித்தார் .
பேட்டியின் போது அருகில் மருத்துவர்கள் விக்னேஷ், விஜய் சாரதி, அரவிந்த், விஷ்ணு, சிவபிரகாஷ் , சங்கர் உள்ளிட்டர் உடன் இருந்தனர்