Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

110 ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியினரை ஏமாற்றிய மர்ம நபர் .

0

 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியை 110 ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளார் மர்ம நபர்.

சிறிய கடை ஒன்றில் டீக்கடை நடத்தி பஜ்ஜி போண்டா போட்டு வியாபாரம் செய்து வரும் வயதான தம்பதியை கேண்டிமேன் சாக்லெட்டில் வரும் போலி ரூபாய் தாளை கொடுத்து ஏமாற்றியதுடன், சில்லறையை வாங்கியும் சென்றுள்ளார் அவர். இது வயதான தம்பதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் முத்துஷா வீதியில், டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியினரிடம் இந்த மோசடி நடந்திருக்கிறது.

கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம்- லட்சுமி. வயதான தம்பதியும்கூட. சில வருடத்திற்கு முன்பு சக்கரை வியாதியில் பன்னீர்செல்வம் ஒரு காலை இழக்க நேரிட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், டீக்கடை தொழிலுக்கு மாறினர். முத்துஷா வீதியில் சிறிய அளவில் டீ கடை வைத்து அன்றாட நடக்கும் வியாபாரத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர் பன்னீர் செல்வம் – லட்சுமி தம்பதி.

இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் கடைக்கு முன்பின் அடையாளம் தெரியாத மர்ம நபர் சென்றுள்ளார். அப்போது கடையில் மின்சாரம் இல்லை என தெரிகிறது. அந்தநேரம் பார்த்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கேண்டிமேன் சாக்லெட்டில் வைத்து கொடுக்கப்படும் போலி ரூபாய் தாள் 110 -ஐ கொடுத்திருக்கிறார். மின்சாரம் இல்லாததால் அந்த வயதான தம்பதியால் அது போலி ரூபாய் தாள் என கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிதுநேரம் கழித்து கரண்டு வந்த பிறகு பார்த்தபோது தான் அவர்களுக்கு அது போலி ரூபாய் தாள் என்பதும், ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற விஷயமும் தெரிந்தது. இது குறித்து லட்சுமி – பன்னீர்செல்வம் தம்பதி வேதனையடைந்தனர்.

 

கேண்டிமேன் சாக்லெட்டில் வரும் போலி ரூபாய் தாள் நோட்டு மூலம் ஒரு வயதான தம்பதி ஏமாற்றப்பட்டிருப்பது ஒருவகையில் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஏன் என்றால், தமிழ்நாடு முழுவதும் இந்த போலி ரூபாய் தாள்களை வைத்து எத்தனை பேர் ஏமாற்றபட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. இது குறித்து போலீஸ் நிலையத்தில் கம்பளைன்டும் கொடுக்கப்படுவதில்லை என்பதால் பொது சமூக கவனத்துக்கு வருவதும் இல்லை. ஒருவகையில் அந்த தம்பதிக்கு விழிப்புணர்வு இல்லை, அதனால் அவர்கள் ஏமாந்திருக்கிறார்கள் என சிலர் சொல்லலாம்.

ஆனால், ஒரு தனியார் நிறுவனத்தின் சாக்லெட் விற்பனைக்காக பயன்படுத்தும் வியாபார யுக்திக்கு இந்த தம்பதி பலியாகியிருக்கிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவது போல், வியாபார தந்தரத்துக்காக ரூபாய் தாள்களைப் போல் அச்சடிக்கப்படும் இந்த போலி ரூபாய் தாள்களை விநியோகபிப்பதற்கும் தடை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.