திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65வது வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் உற்சாக வரவேற்பு.
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு .
அஇஅதிமுகபொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்று 6.12.2024, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு கொறடா தாமரை S.ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இன்று காலை வருகை (6.12..2024, வெள்ளிக்கிழமை) திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்த நிகழ்வின் தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
விமான நிலைய வாயிலில் 65 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி மற்றும் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் என். பாலாஜி ஆகியோர் தலைமையில் சிறப்பான முறையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.