Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல் கடைகோடி ஊழியர்கள் வரை .பகுதி-1

0

 

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது.
கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும், அவர்களின் மனதை வடிவமைக்கவும், நாட்டில் 20 மாநில கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டன.
அதில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியமும் ஒன்று. தற்போது 32 மாநில கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
தமிழ்நாடு
கூட்டுறவு ஒன்றியம் 4.1.1914 இல் தொடங்கப்பட்டது.

இப்படி பாரம்பரியமிக்க கூட்டுறவு தற்போது இங்கு பணிபுரியவர்கள் ஒரு சில நேர்மையானவர்கள் தவிர அனைவரும் லஞ்சம், ஊழலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து வருகிறார்கள் .

தற்போது திருச்சி மாவட்டத்தில் 9 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியிட மாற்றம் செய்து உள்ளனர் .

இதில் கோட்டை அமராவதி பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த சண்முகம் ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்து அதவத்தூர் குடோனுக்கு சூப்பர்வைசர் பணிக்கு சென்றுள்ளார் .

இங்கு அவர் 2 லட்சம் லஞ்சம் கொடுத்து சென்றதற்கு முக்கிய காரணம் பணம் கொழிக்கும் இடம் இது ஆகும் .

ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றி செல்லும் லாரியில் (20%) உதாரணத்திற்கு நூறு மூட்டை என்றால் 80 மூட்டைகள் மட்டுமே கடையில் இறக்கப்படும். மீதி 20 மூட்டைகள் கிலோ 8 ரூபாய் என்ற கணக்கில் சிப்பத்திற்கு கணக்கு செய்து பணத்தை தந்து விடுவார்கள் .

இந்த மொத்த அரிசிகளையும் மணச்சநல்லூர், சமயபுரம் மற்றும் மணப்பாறை பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது .
உயர் அதிகாரிகளான திருப்பதி மற்றும் அறிவழகன் ஆகிய இருவருக்கும் வலது இடது கைகள் இந்த சண்முகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது .

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அமராவதிக்கு ஒப்பந்தத்தின் பேரில் ஓடும் லாரிகள் ( சுமார் 25 லாரிகள் ) மாதவன் என்பவருக்கு உரியது . தற்போது ஒப்பந்த காலம் முடிந்தும் எதன் அடிப்படையில் இவரது ஒப்பந்தம் காலவரையற்று  நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை .

பகுதி 2ல் தற்போது புதியதாக பணியாற்றப்பட உள்ள ஊழியர்கள் யார் யார் அவர்களிடம் பெறப்பட்ட லஞ்சத் தொகை எவ்வளவு என்ற விபரம் .

Leave A Reply

Your email address will not be published.