Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாடிகனில் போப்பு பிரான்சிஸை நேரில் சந்தித்து ஆசி வாங்கினார் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ .

0

 

வாடிகனில்
போப்புடன் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சந்திப்பு.

அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் வாடிகனில் சந்தித்து உரையாடினார் அப்போது போப் அவருக்கு ஆசி வழங்கினார் .

இந்த சந்திப்பின் போது இந்தியாவில் கிறிஸ்தவர்களின் நிலை மற்றும் தமிழகத்தில் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களுக்கு நிறைவேற்றப்படும் சீர்மிகு திட்டங்கள் குறித்தும், அதனால் அவர்களின் ஏற்றமிகு வாழ்க்கை சூழல் குறித்தும் எடுத்துரைத்ததோடு திருத்தந்தை அவர்களை இந்தியாவிற்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.


இந்திய வருகையின் போது, தவறாமல் தமிழகத்திற்கு வரவேண்டும் என்றும்,

தங்களை வரவேற்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற தகவலையும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.