Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் முறையீடு .

0

 

தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு பெருந்திரள் முறையீடு திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.

மாவட்ட தலைவர் காயத்ரி தேவி தலைமை வகித்தார். சித்ரா, சாந்தி, மாலதி , உமா காந்தி முன்னிலை வகித்தனர். செயல் தலைவர் விமலா தேவி கோமதி கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்.

பணியிடங்களில் கிராம சுகாதார செவிலியர்களை உடனே காலம் முடிவு ஊதியத்துடன் பணியமர்த்த வேண்டும்.
கணினியில் பதிவேற்றம் செய்த பணியினை மீள செய்ய பணிப்பதை நிறுத்த வேண்டும்.
கிராம சுகாதார செவிலியர் நிலையில் இருந்து சுகாதார செவிலியர் நிலைக்கு பதவி உயர்வில் செல்லும் சகோதரிகளை மீண்டும் துணை மைய பொறுப்பு பணிகளுக்கு உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முடிவில் அமிர்தவல்லி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.