மதுக்கடை, மணமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்.
திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி
அமமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்ற அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு .
மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் உறையூர் குறத் தெருவில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,
உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் குமார் ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள் . சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
இந்தப் போராட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் கலை , மாவட்ட துணை செயலாளர்கள் தன்சிங்,லதா, பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம்ராமமூர்த்தி, வேதராஜன், மாநில அம்மா தொழிற்சங்க துணைச் செயலாளர் டோல்கேட் கதிரவன், பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு ,கம்ருதீன்,உமாபதி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாகநாதர் சிவகுமார்,முன்னாள் கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு கதிரவன் ஐடி பிரிவு தருண் ,சிறுபான்மை பிரிவு நாகூர் மீரான், மகளிர் அணி சாந்தி,நல்லம்மாள்,
மற்றும் உறையூர் சாமிநாதன், கல்லணை குணா,ரவிச்சந்திரன், ஜெகதீசன்,பக்ருதீன்,அல்லூர் ராமலிங்கம்,
கலைமணி பாபு,லோகநாதன்,கைலாஷ் ராகவேந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாலையில் அ.ம.மு.க. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, தமிழர் தேசம் கட்சியின் சார்பில் பல்வேறு நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக பேசினார்கள்.