திருச்சி மாநகரில் புதிய கமிஷனராக காமினி அவர்கள் பொறுப்பு ஏற்ற பின் குற்ற சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில்
தற்போது மீண்டும் சம்பவங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இரண்டு நாட்கள் முன்பு சுப்பிரமணியபுரம் சுந்தரராஜ் நகரில் வாட்டர் டேங்க் அருகில் இரவில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியானது .

இதுபோன்று மாநகரில் கஞ்சா விற்பனை, போதை மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது என செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது .
திருச்சி மாநகரில் வயதானவர்கள், ஓட முடியாத உடல்நிலை கொண்டவர்கள் , பெண்கள் ஆகியவர்களை குறிவைத்து செல்போன் திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
இன்று காலை 11:30 மணி அளவில் கே.கே. நகரில் இருந்து மன்னார்புரம் செல்லும் பாதையில் இந்தியன் பேங்க் காலனி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் இருவர் அவ்வழியே சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர் .
இதேபோன்று கண்டோன்மெண்ட் லிமிட்டில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாகவும் புகார் வந்துள்ளதாக கூறப்படுகிறது .