ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் வருகை திடீர் ரத்து.
ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நீலகிரி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். வருகிற 30ந்தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவரங்கம் பஞ்சகரை யாத்திரி நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்கி அங்கிருந்து கார் மூலம் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது . இதைத் தொடர்ந்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு இருந்த நிலையில்
தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவரங்கம் கோவில் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.