Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய சுகாதார குழும இயன்முறை மருத்துவ சங்கத்தினர்.

0

 

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மரு.வீரசிவபூசணன், முதுநிலை தலைவர் சுரேஷ் சுப்பையா, மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

மேலும் இயன்முறை மருத்துவர்கள் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட ஆரம்ப நிலை குறுக்கீட்டு மையங்கள், தொற்றா நோய் பிரிவு, முதியோர் நலப் பிரிவு என மொத்தம் 110 இயன்முறை மருத்துவர்களும், புறநகர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 463 இயன்முறை மருத்துவர்களும் என ஒட்டுமொத்தமாக 573 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், கொரோனா காலத்தில் பணியாற்றிய இயன்முறை மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், தமிழ்நாடு தேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் இயன்முறை மருத்துவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 35 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் ஊதிய உயர்வுக்காக கடந்த காலங்களில் என்.ஹெச்.எம் திட்ட இயக்குனர், டி.பி.எச் இயக்குனர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை மற்றும் இணை இயக்குனர்கள், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.