Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

10 வருடங்களுக்குப் பின் திருச்சியில் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்வு. வழக்கறிஞர்கள்அனைவரும் பங்கேற்க செயலாளர் வெங்கட் அழைப்பு.

0

'- Advertisement -

 

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் *Bench and Bar meeting*( நீதிபதிகள் வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி ) வருகின்ற திங்கட்கிழமை 25/11/2024 ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் புதிய கட்டிடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து கூறலாம் அல்லது தலைவர் முல்லை சுரேஷ் இடம் கூறினால் அவர் நமது தேவைகளை அங்கு நேரில் சென்று எடுத்துரைப்பார்.

கட்டாயம் வழக்கறிஞர்கள் தாங்கள் சீருடையில் (uniform) வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பார் கவுன்சில் அடையாள அட்டை (ID card) கையில் வைத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.