Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தவர் ஸ்டாலின். திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி .

0

 

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து தற்போது

அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பேச்சு.

திருச்சி புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்குழு கூட்டம் சோமரசம்பேட்டையில்
மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையிலும், பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையிலும் நடைபெற்றது .

இக்கூட்டங்களில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்,அமைப்புச் செயலாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிப் பேசினர்.

கூட்டத்தில், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல் மனோகரன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் சிவபதி,
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன். செல்வராஜ்,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்,மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன்,மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன்,
எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் , புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி ,
இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் தேவா,
ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோப்பு நடராஜ், ஆதாளி,
நிர்வாகிகள்
செல்வம்,
அழகாபுரி செல்வராஜ் துறையூர் பிரகாஷ் கவிதைமணி
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்டம்:

கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

கூட்டத்தின் நோக்கம்
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக கொண்டு வர வேண்டும் என்பதுதான்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கட்சியில் இவ்வளவு சிக்கல் கிடையாது.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக கரைந்து விடும் என திமுகவினர் கருதினர்.
ஆனால் எடப்பாடி திமுகவினரின் நினைவை தவிடு பொடியாக்கி அதிமுகவை கட்டிக் காத்து வருகிறார்.
எடப்பாடி
கடவுளால் பார்த்து அனுப்பி வைக்கப்பட்டவர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார்.
நான் கொஞ்சம்
அசந்திருந்தால் அரசு ஊழியர்கள்
எனக்கு பட்டை நாமம் சாத்தி என்னை எம்எல்ஏ ஆக விடாமல் தடுத்திருப்பார்கள்.
செந்தில் பாலாஜி என்ற நிபுணரை புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் மூலம்
டாஸ்மாக் சரக்குகளின் விலையை டிசைன் டிசைனாக ஏற்றுகிறார்கள்.
லாட்டரி,
கஞ்சா, போதைப்பொருள் வேண்டுமா? திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு
வாருங்கள். அத்தனையும் எளிதாக கிடைக்கிறது. திமுகவினர் தான் விற்பனை செய்கிறார்கள்.
கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு பணம், பொருள் கொடுத்து கொடை வள்ளலாக திகழ்ந்தவர் எடப்பாடி .
ஓ.பி.எஸ்., டி.டி.வி தேர்தலில் தோல்வி அடைந்து விட்டனர்.
அவர்கள் இருவரின் சேப்டர் குளோஸ் ஆகி விட்டது.20 தொகுதியுடன் ரூ.100 கோடி வரை பணம் கேட்டு வரேன் என கூறுகிறார்கள்.. கண்டிப்பாக அது போன்ற கட்சிகளிடம் கூட்டணி கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி மக்கள் வாக்களித்தாரோ அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அமைப்புச் செயலாளர் தங்கமணி பேசியதாவது:-
,‘‘2026 சட்டமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்ற வேண்டும். அதற்கு, கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தல், புதிய கார்டுகளை விடுதலின்றி வழங்குதல், பூத் வாரியாக கிளைகள் அமைத்தல், பூத் கமிட்டி முகவர்களில் சரியான நபர்களை நியமித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்தி திருச்சியில் கூட்டணி பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக பணியாற்றி திருச்சியை மீண்டும் அதிமுக கோட்டையாக உருவாக்க வேண்டும்’’,
இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்தி, ராவணன் , பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், பாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.