திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் .
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 3.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
சோதனையில், ஒரு பயணி ரூ. 3.46 லட்சம் மதிப்பிலான 34,600 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, சிகரெட்டுகளை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.