Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுபான விடுதியை எதிர்த்து உயர்நீதிமன்றதை அணுகி இருப்பது பற்றியும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் ஆலோசனை .

0

 

மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொது செயலாளர், டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க

திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்,

திருச்சி மாநகர் மாவட்ட அவை தலைவர் எம்.எஸ். ராமலிங்கம் தலைமையில்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப .செந்தில்நாதன் முன்னிலையில் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தன்சிங், லதா, வழக்கறிஞர் சரவணன்,

மாநில நிர்வாகிகள் டோல்கேட் கதிரவன், ராஜா ராமநாதன், பஷீர் அகமத்,

பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதராஜன்,

பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்
கல்நாயக் சதீஷ்குமார், கம்ருதீன், வேதாத்திரி நகர் பாலு, உமாபதி, வெங்கட்ரமணி, மதியழகன், கதிரவன், கருப்பையா, சண்முகம், இளங்கோவன், குப்புசாமி, அனலை சங்கர்,

சார்பு அணி செயலாளர்கள் பெஸ்ட் கே.பாபு, நாகநாதர் சிவக்குமார், சாந்தா, தண்டபாணி, ஜான் கென்னடி, நல்லம்மாள், என்.எஸ். தருண், கோமதி மங்கை, கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், அகிலாண்டேஸ்வரி, பெட்டவாய்த்தலை சிவகுமார்,
மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வரும் டிசம்பர் 13 அன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும்,

உறையூர் பகுதியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுபான விடுதிகளை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகி இருப்பது பற்றியும், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்தும்,

நவம்பர் 1-ம் மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பெற்று கைதான நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.