எகிப்தில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வேன்று திருச்சி திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு .
எகிப்தில் நடைபெற்ற
டிரையத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வேன்று திருச்சி திரும்பிய கல்லூரி மாணவருக்கு உற்சாக வரவேற்பு .
எகிப்துநாட்டில் நான்கு நாட்கள் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியா உள்பட 32 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் 19 வயதுக்குட்பட்ட டிரையத்லான் (நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் உள்பட) போட்டியில் திருச்சி கிரீன் என்பவரின் மகன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ரூயல்ஆர்தடர்ன் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
இதேபோட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 58 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட ரூயல்ஆர்தடர்ன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தநிலையில் நாடு திரும்பிய ரூயல்ஆர்தடர்னுக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம், 47வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சார்லஸ் , ரேஜிஸ், ரியாஸ்,புதிய ஜெருசேலம் தேவாலயம் பிஷப் பால்,மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.