திருச்சி பாலக்கரையில்
கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் புது மாப்பிள்ளை விபரீத முடிவு.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 8-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). இவருக்கும் குமாரி (வயது 25) என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர் .இந்த நிலையில் சுபாஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணுடன் அவர் செல்போனில் அடிக்கடி அரட்டை அடித்து வந்துள்ளார்.
இதை அறிந்த குமாரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவரை அந்த தொடர்பை கைவிடுமாறு கண்டித்தார்.
இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுபாஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி குமாரி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.