Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.

0

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.

திருச்சி கோணக்கரையில்
தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையத்தினை
மேயர் மு.அன்பழகன் நேற்று திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தெருக்களில் அடிபட்டு, நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன. இதுபோன்ற தெருநாய்களை மீட்டு, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புளூ கிராஸ் அமைப்பின் நிதியில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உறையூர் கோணக்கரை ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தெருநாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தமையத்தில் தெருக்களில் காயமுற்று அல்லது நோய் வாய்ப்பட்டு பரிதாபகரமான நிலையில் சுற்றித்திரியும் நாய்களை கொண்டு வந்து அவற்றுக்கு ப்ளூ கிராஸ் அமைப்பின் மூலம் சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட உள்ளது தற்போது வரை 25 நாய்களுக்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மேயர் அன்பழகன் தெரிவித்ததாவது,:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது.
தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன. மேலும் ப்ளூ கிளாஸ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர் .
இதைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இந்த மையங்களில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. .
இந்த சிகிச்சை மையத்தில் தொற்றுக்கொள்ளாகிய கேட்பாராற்று தெருகளில் வலம் வரும் நாய்கள் வாகன விபத்துகளில் சிக்கி காயம் பட்டு சிகிச்சை கிடைக்காமல் அவதி படும் நாய்களுக்கு உதவிடும் வகையில் இந்த மையம் கட்டப்படுகிறது. இங்கு நாய்கள் தனித்தனியாக கட்டி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நோய்கள் தாக்கிய நாய்களுக்கு தனியாக வைத்து பராமரிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது .

இந்த மையத்துக்கான பிரதியுக கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் வழங்கப்படும் பொது மக்கள் 9894369069 என்ற எண்னை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் தெரு நாய்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம், தகவல் கிடைத்தவுடன் ப்ளூ கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்துக்கு சென்று நாய்கள் மீட்டு வந்து சிகிச்சை அளித்து பராமரிக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் , மாமன்ற உறுப்பினர்கள் ,சுகாதார அலுவலர்கள் மற்றும் ப்ளூ கிராஸ் அமைப்பின் ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.