Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: அரியமங்கலத்தில் 2.05 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது. தென்னூர் பாபு சிக்காத பின்னணி என்ன?

0

 

திருச்சி: அரியமங்கலத்தில் 2.05 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை.

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அரங்கநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக குற்றத் தடுப்பு நடவடிக்கையாக அரியமங்கலம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2050 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றியும் அரிசியை கடத்தி வந்து, மறைத்து வைத்திருந்த அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்து வருகிறார்.

தொடர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்ததன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

அதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக உள்ள காஜாமைதீனுக்கு குண்டர் தடுப்புக் காவல் ஆணை சார்பு செய்யப்பட்டது.

மேலும் திருச்சியில் தற்போது ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற தென்னூர் பாபு, சிடி பாபு, மற்றொரு பாபு ஆகியோர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் . இதில் தென்னூர் பாபு அரிசி தராத ரேசன் கடை ஊழியர்களை மிரட்டி வருகின்றாராம் . கேட்டால் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எங்கள் கையில் எனக்கு ஒரு தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் .

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் நடவடிக்கையில் சிக்கியும் தென்னூர் பாபு தெனாவட்டாக பேசுவதின் ரகசியம் என்ன ?

Leave A Reply

Your email address will not be published.