இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை இணைந்து நடத்திய காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
இந்திய நாடார் பேரவை மற்றும்
நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து
பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பினி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைவர் ஜெடிஆர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஆடிட்டர் ராய் ஜான் தாமஸ் FCA, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர்
பாலாஜி M.சுப்ரமணியன் நாடார், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி தலைவர் சிதம்பரம், தொழிலதிபர் கார்த்திகேயன்,
பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்க தலைவர் அய்யனார் பெரிய நாடார், செயலாளர் பால்ராஜ் நாடார், பொருளாளர் பன்னீர்செல்வம் நாடார், துணைத் தலைவர் அருணாச்சலம் நாடார், எடமலைப்பட்டிபுதூர் நாடார் சங்க தலைவர் சங்கர் நாடார், செயலாளர்
இசக்கிமுத்து நாடார், பொருளாளர் மைக்கில் நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர்
ராஜ்குமார், மாநில பெருளாளர் கணேசன், மாநில தலைமைச் செயலாளர் ஆழ்வார் தோப்பு ஜெயராஜ், திருச்சி மாவட்ட தலைவர் முருகன், திருச்சி மாவட்ட செயலாளர் பீமநகர் ராஜேஷ், திருச்சி மாநகரத் தலைவர்
செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.