ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க.
அதிமுக உறுப்பினர்களுடன் கழக உறுப்பினர் உரிமை அட்டைகள் வழங்கிய பணிகள் குறித்து ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக அளவிலான ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர். ப.குமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கலந்தாய்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலன், சந்திரசேகர், மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் சேது, இராவணன், கண்ணூத்து பொன்னுச்சாமி, சிவகுமார், கார்த்திக், பழனிசாமி, நகர செயலாளர்கள் பவுன் ராமமூர்த்தி, பொன்னி சேகர், பேரூர் செயலாளர் ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், பிச்சை பிள்ளை, திருமலை சாமிநாதன், பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ் சார்பு அணி செயலாளர்கள் முருகன், பாஸ்கர்,
சண்முகபிரபாகரன்,அருண் நேரு, செல்வமேரி ஜார்ஜ், டோமினிக் அமுல்ராஜ், ராஜமணிகண்டன், Nகார்த்திக், ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார் பொதுக்குழு உறுப்பினர் விஜயா, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.