கொலை நகரமாக மாறி வரும் திருச்சி மாநகரம். சட்டம் ஒழுங்கு செயல்படவில்லை. திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் குற்றச்சாட்டு .
கொலை நகரமாக மாறிவரும் திருச்சி மாநகரம் . திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் குற்றச்சாட்டு .
இதுகுறித்து பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறியிருப்பதாவது :-
தற்போது திருச்சி மாநகரம் முழுவதும் தடையில்லா கஞ்சா மற்றும் போதை பொருட்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு கிடைக்கிறது.
மேலும் திருச்சியில் டாஸ்மார்க் உடன் இணைந்திருக்கும் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது . மேலும் சந்துக்களிலும், கழிப்பறையிலும் கூட இரவு 10 மணி முதல் அடுத்த நாள் மதியம் 12 வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது .( இது கரூரில் இருந்து வரும் போலி மதுபானம் எனவும் கூறப்படுகிறது )
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது .
தனியே செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு வழிப்பறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
மேலும் பொது இடங்களிலேயே பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது . சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என்ற சந்தேகத்திலேயே திருச்சி மாநகரம் உள்ளது. இதன் உச்சமாக,
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சுரேஷ் என்பவர் அவரது மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் ஆளும் திமுக அரசின் கண்ணசைவிற்க்கு பணி செய்வதை நிறுத்தி,மாநகர சட்டம் ஒழுங்கை காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவாரா என்பது தான் தற்போது பொது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது என
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .