Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 வயது சிறுவன் மீது புல்லட் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கிய திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் 15 வயது மகன். பரபரப்பு வீடியோ

0

 

கடந்த 21 9 2024 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தீரன் என்கிற மூன்று அரை வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும் சிறுவன் ஓட்டி சென்ற புல்லட்டில் இடித்துவிட்டு அச்சிறுவனை திட்டி சென்ற வீடியோ பதிவு.

இடித்து விட்டு சென்ற சிறுவனின் தந்தை முருகராஜ் என்பவர் திருச்சி கே.கே.நகரில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அச்சிறுவன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன் ? காவலரின் மகன் என்பதால் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கரம் வாகனம் இயக்கலாமா ? பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கேள்வி .

Leave A Reply

Your email address will not be published.