Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உழக்கு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.

0

உழக்கு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உழக்கு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார்.

சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் துவக்க உரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உழக்கு குறித்து பேசுகையில்,உழக்கு என்பது பாய்மப் பொருள்களின் கொள்ளளவை அளப்பதற்குத் தமிழர்கள் பயன்படுத்தும் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். சில நேரங்களில் பண்டங்களை அளப்பதற்கும் உழக்கு பயன்படுத்தப்படுகிறது. உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும். உழக்கு என்பது ஒரு உழக்கு அளவுள்ள பாத்திரத்தையு குறிக்கும். இந்த பாத்திரத்தைப் பித்தளை வார்ப்பிரும்பு மற்றும் ஈயத்தில் செய்திருப்பார்கள்.

இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள் என்றார்

Leave A Reply

Your email address will not be published.