இந்திய கிரிக்கெட் அணியின் சொத்தாக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா டி20 உலக கோப்பைக்கு பிறகு நீண்ட இடைவெளியில் இருக்கிறார்.
அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பும்ரா எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது என்ற கேள்விக்கு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.
உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் இந்தியாவின் பும்ரா நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதில் இந்திய அணிக்காக அவர் என்ன செய்தார் என்று அனைவரும் அறிந்த விஷயம். இந்திய அணிக்கு அடுத்தடுத்து பெரிய தொடர்கள் வர இருப்பதால் அவரை முக்கிய தொடர்களில் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருக்கிறது.
இந்த நிலையில் ஓய்வு எடுத்து வரும் பும்ரா, சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது என்று பும்ராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் சுற்றி இருந்தவர்களை நெகழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கடினமான பேட்ஸ்மேன் குறித்து பும்ரா கூறும்போது “இந்த கேள்விக்கு நான் ஒரு நல்ல பதிலை கூற விரும்புகிறேன். உண்மையான காரணம் என்னவென்றால், இந்த விஷயத்தில் நான் எதையும் என் தலையில் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் கிரிக்கெட் களத்தில் என் வேலையை சரியாக செய்தால் என்னை தடுக்க யாராலும் முடியாது என்று என் மனதில் நான் பதிய வைக்கிறேன். நான் எதிரே இருக்கும் வீரரை விட என் மீது கவனம் செலுத்துகிறேன்.
நடக்கக்கூடிய எல்லாவற்றின் மீதும் எனக்கு கட்டுப்பாடு உள்ளது. எனக்கு சிறந்த வாய்ப்பை நான் வழங்கினால் மற்ற அனைத்தும் தன்னைத்தானே அது கவனித்துக் கொள்ளும்” என்று கூறி இருக்கிறார். அவரது பதில் சுற்றி இருந்த அனைவரும் உற்சாகமாக கைதட்டி வரவேற்கும் வகையில் அமைந்தது.